×

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: கோடை சீசன் களை கட்டி உள்ள நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் பூத்து குலுங்குகிறது. கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை ஐந்து நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது துரித கதியில் நடந்து வருகிறது.

35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூத்துள்ளன. குறிப்பாக, பேன்சி, சால்வியா மற்றும் பேன்சி போன்ற மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். மலர் கண்காட்சியின் போது, அவை அனைத்தும் மாடங்களில் வைக்கப்படும். தற்போது பூங்காவில் உள்ள பெரணி இல்லம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் பல்வேறு வகையான பெரணி செடிகளை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Oothi Government Botanical Park ,Feeder Government Botanical Park ,Feeder Government Botanical Zoo ,Dinakaran ,
× RELATED இரண்டாம் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் அலங்கார வாழை உற்பத்தி தீவிரம்